தடையை தாண்டி செயல்படிக்கு வந்த டிக்டாக் !

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியது.

அதன்படி டிக்டாக் நிறுவனத்தின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக்டாக் செயலி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில், தடை நீக்கப்பட்டதால் டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news