துப்பாக்கி முனை – விமர்சனம்

“துப்பாக்கி முனை” – எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு; மும்பையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னராக  இருக்கிறார்.  தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு எண்கவுண்டர் தான் சரியான தண்டனை என்பது அவருடைய தீர்க்கமான நம்பிக்கை. அதனால் பலமுறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவரது இந்த குணம் பிடிக்காத அவரது அம்மாவும், காதலியும் அவரை விட்டு பிரிகின்றனர்.

இராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி ஷாவை  எண்கவுண்டர் செய்வதற்காக அங்கு செல்கிறார். தான் எண்கவுண்டர் செய்யவிருக்கும் குற்றவாளி ஷா நிரபராதி என்பதை அறிகிறார். ஷாவை இந்த பிரச்சனைக்குள் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

Vikram Prabhu, Hansika Motwani in Thuppakki Munai Movie Stills HD

நேர்மையான போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாப்பாத்திரம் விக்ரம்பிரவுவிற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. தன்னுடைய தவறுகளை உணருவது,  நிரபராதியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவர் நடந்து கொள்ளும் விதம்; கற்பழிக்கப்பட்டு இறந்த பெண்ணின் தந்தையின் உணர்சிகளை புரிந்து கொள்ளும் விதம் என அவரது நடிப்பை அழகாக வெளிபடுத்தி இருக்கிறார்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வரும் M.S.பாஸ்கர் தன்னுடைய அனைத்து காட்சிகளிலும் தான் நடிப்பில் சீனியர் என்பதை உறுதி செய்திருக்கிறார். கதாநாயகியாக வரும் ஹன்ஸிகா, வில்லனாக வரும் வேலா ராமமூர்த்தி  என படத்தில் மீதமிருக்கும் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களில் வலு இல்லாததால் அவர்களும் வலுவிழந்தே தெரிகின்றனர்.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.  ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் திரைக்கதையில்  எந்த கதாபாத்திரத்தை ஃபாலோ செய்வது என்ற கேள்வியை ஆடியன்ஸிற்கு ஏற்படுத்தி இருக்கிறார். கற்பழிக்கப்பட்ட பள்ளி மாணவி இறந்தத்தில் ரசிகர்கள் மனதில் வருத்தம், நிரபராதியான ஷா தப்பிப்பாரா, மாட்டாரா என்ற பதட்டம், M.S.பாஸ்கர் தன் மகள் இறந்ததற்கு நியாம் பெறுவாரா மாட்டாரா என்ற ஏக்கம் என ஆடியஸின் உணர்வுகளை திருப்தி படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்காமல் ஏமாற்றம் தந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராசாமதி மற்றும் இசையமைப்பாளர் எல்.வி.முத்துகணெஷ் தங்களுடைய பணிகளை குறையில்லாமல் செய்துமுடித்துள்ளனர்.

படத்தில் நகைச்சுவை காட்சிகள்,  பாடல்கள்  என சில கமர்ஷியல் விஷயங்களை கதைக்கு தேவையில்லாததால் ஒதுக்க்கி  வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

துப்பாக்கி முனை – “ஓட்டை” 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news