துப்பாக்கி முனை படத்தின் வெற்றிவிழா கொண்டாடிய படக்குழு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹன்சிகா நடிப்பில் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. எல். வி. முத்து கணேஷ் இசையமைப்பு மற்றும் ராசமதி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L.V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி, மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news