September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஆட்டுக்கிடை போடும் மக்களின் வாழ்வியலை விளக்கும் “தொரட்டி”

சென்னை: தமிழ்சினிமாவில் எதார்த்ததை பேசும் படங்கள் வருவது அரிது. அந்த வரிசையில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள படம் “தொரட்டி”

படத்தின் நாயகனாக ஷமன் மித்ரு நடிக்கிறார். நாயகியாக சத்யகலா, அழகு, வெண்ணில்லா கபடிக்குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன், ஜெயசீலன், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் ஆட்டுகிடை போடுபவர்களில் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டுகிடை என்பது பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பதாகும். அவற்றின் சானம் வயலில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்தை தருகிறது. தமிழர்களின் பாரம்பரிய தொழில்நுட்பமான இந்த தொழில் தென் தமிழ்கத்தில் பிகவும் பிரபலமாக இருந்து வந்தது..

தொரட்டி படத்திலும் 1980 நடந்த சில உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரிக்கிறார். இசை ஜித்தின் ரோஷன் மற்றும் வேத் சங்கர், ஒளிப்பதிவு குமார் ஸ்ரீதர், பாடல்கள் சினேகன். இயக்கம் பி.மாரிமுத்து  திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் “தொரட்டி” படத்தை ரிலீஸ் செய்கிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news