September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா

தயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அப்போது அந்த விழா மேடையில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முக தன்மைகொண்ட ஹிப் ஹாப் ஆதி பேசினார். அவர் கூறியதாவது : எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன்.

காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது என ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news