Inandoutcinema - Tamil cinema news

இரும்பு திரை படத்தில் நடிப்பதற்கு இந்த மட்டும்தான் காரணம் – நடிகர் அர்ஜுன்

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் மற்றும் விமர்சனத்துக்குள்ளானார் நடிகர் விஷால் இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால்.

அவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் மற்றும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என இரு நிகழ்வையும் நேற்று ஒரே மேடையில் அரகேற்றினர் விஷால். அப்போது பேசிய நடிகர் அர்ஜுன் கூறியதாவது : திரைப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க நான் ஒத்துக்கொள்ளவில்லை.

தேசப்பற்று உள்ள படங்களில் நடித்து இருக்கும் நிலையில் எதற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என தயங்கினேன். இயக்குனர் மித்ரன் கதை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திகிட்டு இருக்கணும். நீங்க எல்லாம் திருடனுங்க. நான் தேளு.. என்ற ஒரு வசனத்தை சொன்ன உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன் என நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news