Inandoutcinema - Tamil cinema news

நடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக மாறியதற்கு இவர்தான் காரணம் – விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை விக்ரமுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளார்.

இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில் : தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் நான் இதுவரை நடித்த நேனு லோக்கல், நேனு ஷைலஜா ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் ஹிட் அடித்தன. அதேபோல் அவர் தமிழில் எனக்கு இசையமைக்கும் இப்படமும் ஹிட் ஆகணும்.

நான் எங்கேயோ பாடுற வீடியோவை பார்த்துட்டு தயாரிப்பாளர் ஷிபுதான் என்னை மாட்டிவிட்டுட்டாரு. அதன் பின்பே நான் பாடினேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news