September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு இது தான் – இயக்குனர் இளன்

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பியார் ப்ரேமா காதல் ஆகும். இந்த படம் காதல் மாற்றல் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா எனபது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.என் ராஜராஜன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். பியார் ப்ரேமா காதல் படத்தை புதுமுக இயக்குனரான இளன் இயக்கியுள்ளார்.

இந்த படம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் வசூலில் சாதனை புரிந்து வரும் பியார் பிரேமா காதல் படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்துள்ளனர்.

இது பற்றி இயக்குனர் இலன் கூறியதாவது : இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் இலன்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news