September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரூ.850 கோடிக்கு டீல் ஓகே – சத்தியம் சினிமாஸை பிவிஆர் வாங்கியது இப்படித்தான்

சென்னை: தென்னிந்தியாவின் பிரபலமான திரையங்குகளில் ஒன்று சத்யம் சினிமாஸ் எனப்படும் எஸ்பிஐ சினிமாஸ். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தலங்கானா, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 76 திரையரங்குகளை கொண்டுள்ள சத்யம் சினிமாஸ் கடந்த 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு உதயம் என்றால் டாப் கிளாஸ் மக்களுக்கு எப்போதுமே சத்யம் தான். இந்நிலையில், தென்னிந்தியாவில் நீண்ட காலமாக கால் ஊன்ற முயற்சி மேற்கொண்டு வரும் பிவிஆர் சினிமாஸ், எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகளை வாங்க போவதாக கடந்த ஒரு வருடமாகவேல் தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. சரியான விலை படியாததால் ஒப்பந்தம் முடியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது எஸ்பிஐ சினிமாசை – பிவிஆர் மொத்தமாக வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், 71 சதவிகித பங்குகளை ரூ.633 கோடிக்கும், அதுதவிர மேலும் சில பங்குகளை ரூ.210 கோடி என மொத்தமாக ரூ.850 கோடிக்கு எஸ்பிஐ சினிமாஸை – பிவிஆர் கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 60 நகரங்களில் 152 இடங்களில் 706 ஸ்கிரீன்களுடன் உலகின் 7வது மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையை பிவிஆர் நிறுவனம் பெற்றுள்ளது.

நடப்பாண்டு மார்ச் மாத கணக்கின்படி, எஸ்பிஐ சினிமாஸ்சின் மொத்த மதிப்பு, ரூ.319 கோடி ஆகும். இந்தநிலையில், ரூ. 850 கோடி இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 1000 திரையரங்குகள் அமைப்பதே, பிவிஆர் நிறுவனத்தின் நோக்கம் என அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் பிஜிலி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news