Inandoutcinema - Tamil cinema news

இந்த கூட்டம் இவருக்காக சேர்ந்த கூட்டம் தான் -விழா மேடையை அதிர வைத்த சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிம்பு, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், அமீர், ராம், சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் கூறியதாவது :இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி. அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன்.

அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என் நடிகர் சிம்பு கூறியுள்ளார். யுவனை பற்றி நடிகர் சிம்புவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவும் சிம்பு நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news