September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

இப்போல்லாம் போராட்டம்பன்னாகூட மதிக்கிறதுக்கு ஆள் இல்ல – விஜய் சேதுபதி

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கடந்தவருடம் வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டி தமிழ் திரையுலகின் உச்சம் தொட்டு, மாபெரும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். சமீபத்தில் வெளியான ஜூங்கா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசுல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி தற்போது 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, செக்க சிவந்த வானம் கார்த்திக் சுப்ராஜ் திரைப்படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இன்னிலையில் சமீபத்திய பேட்டியில் சமூகப் பிரச்னைகளுக்கு நடிகர்கள் குரல் கொடுப்பதை பற்றி கருத்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : அக்கறைங்கிறது தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. என் குழந்தைக்கு அடிபட்டா மத்தவங்க சொல்லி அக்கறை செலுத்தணுமா, இல்லை நானே பார்த்துக்கணுமானு எனக்குத் தெரியும். ஒரு பிரச்னை குறித்து குரல் கொடுத்தா என்ன, கொடுக்கலைனா என்ன ? அது அவங்களோட தனிப்பட்ட உரிமை.

ஒரு தொலைக்காட்சி சேனல்ல இரவு 9 மணிக்கு நாலு பேர் ஒரு பிரச்னை பத்திப் பேசுறாங்க. ஆனா, தீர்வைப் பத்தி அவங்க பேசவே மாட்டாங்க. ஒருத்தர் பேசுறதுக்கு முன்னாடியே இன்னொருத்தர் பேச ஆரம்பிச்சு சண்டை போட்டுக்குவாங்க. அப்பட்டமா பொய் சொல்வாங்க. இப்படி பேசிக்கிட்டும், மத்தவங்க மேல பழி போட்டுக்கிட்டும் இருப்பாங்க.

அதனால, கருத்து சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. முன்ன மாதிரி இல்ல. இப்போல்லாம் போராட்டம்பன்னாகூட மதிக்கிறதுக்கு ஆள் இல்ல. சமூகப் பிரச்னைகளுக்கு நடிகர்கள் குரல் கொடுக்கணும்னு நினைக்கிறது தவறு, அவசியமற்றது.குரல் கொடுப்பதனால் ஒரு தீர்வு கிடைக்காது என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news