September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நெல்லை தியேட்டரில் இளநீர் விற்பனை – சென்னையிலும் வந்தா நல்லா இருக்குமே

சென்னை: தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் நூற்றும் மேற்பட்ட தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் எனப்படும் நவீன தியேட்டர்களாக உள்ளன. சென்னையில் பெரும்பாலானவை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாகவே உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், அங்கு பல மடங்கு விலை கூட்டி விற்கப்படும் உணவு என்று செலவு எகிறி விடும். இதனாலேயே பலர் படம் பார்க்க தியேட்டர் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.

இந்நிலையில், உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை தியேட்டர்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் உள்ள ராம் முத்துராம் தியேட்டரில் சமீபத்தில் வெளிவந்த கார்த்தியின் “கடைகுட்டி சிங்கம்” படம் திரையிடப்பட்டபோது அங்கு இளநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம், ”ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !! விவசாயம் பற்றி பேசும் ‘ கடைக்குட்டி சிங்கம் ‘ திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ராம் முத்துராம் தியேட்டர் நிர்வாகத்தின் இந்த யோசனை பல்வேறு தறப்பில் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், படம் பார்க்க வருபவர்களும் இளைநீரை வாங்கி குடிப்பதால் விற்பனையிலும் கள்ளா கட்டுகிறது. இதுபோன்ற முயற்சியை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மற்ற தியேட்டர் உரிமையாளர்களும் எடுக்க வேண்டும், என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news