September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

என் பேரில் இருக்கும் சத்தியம் என் நாவில் கிடையாது – சத்யராஜ்

அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த விழா மேடையில் நடிகர் சத்யராஜ் கூறியதாவது : இந்த படத்தின் மூலம் இயக்குனர், நாயகி என பல நல்ல விஷயங்களை சிவகார்த்திகேயன் வழங்கியிருக்கிறார்.

என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்ன கேட்டாலும் தெரியும் சார் என்று பொய்யாக சொல்லி விடுவேன். ஆனால் நாயகி ஐஸ்வர்யா தனக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு, அதன்பிறகு அதை கற்றுக் கொண்டு கடினமாக உழைத்திருக்கிறார். அதி தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் கம்புச்சண்டை, கத்திச்சண்டை மட்டுமே கற்றுக் கொண்டேன்.

அது மட்டுமே நான் சொன்ன உண்மை. என் பெயரில் தான் சத்தியம் இருந்தது. வாய்ப்பு கேட்கும் காலகட்டத்தில் நாவில் சத்தியம் இல்லை. மார்க்கெட்டில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் கதாநாயகன் இந்த மாதிரி ஒரு படம் தயாரித்து ஊக்குவிப்பது நல்ல விஷயம்.

கமல் சார் இதே மாதிரி என்னை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தை தயாரித்தார். விவசாயத்தையும், விளையாட்டையும் வைத்து கதை சொல்லியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news