தளபதி விஜயா அல்லது ஸ்டாலினா ? உதயநிதியின் அதிரடி பதில் – விவரம் உள்ளே

தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அனைவருமே தளபதி என்ற அடைமொழியுடன்தான் பொதுமக்களும் மற்றும் அவரது தொண்டர்களும் அழைப்பார்கள். திமுக கூட்டங்களின் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் என அனைத்திலுமே தளபதி என்றே குறிப்பிட்டு இருக்கும்.

அதே போல் தமிழ் திரையுலகில் இளைய தளபதி என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்துவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக பலரும் தளபதி விஜய் என்றே அழைத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருமே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற மறைமுகமாகப் பேசினார்கள்.

இன்னிலையில், ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர்கள் ? பார்த்து செய்யுங்க சார் என உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் ஆம். திரையுலக தளபதி விஜய் அண்ணா. திரையுலக தல அஜித் சார் என்பது சரி தான் என பதிலளித்துள்ளார். நடிகர் உதயநிதியின் இந்த பதில் தற்போது வைரலாக ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news