Inandoutcinema - Tamil cinema news

விஜய் சேதுபதி படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ளார். சீதக்காதி என்ற கலைஞரின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதி மேக் அப் போடும் வீடியோ தி மேக்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, வயதான வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சீதக்காதி திரைப்படம் வரும் நவம்பர் 15-ம் தேதி வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பாடல் வரும் திங்கள் அன்று, மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ஏற்கெனவே சூது கவ்வும், ஆரஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் வயதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் 70 வயதுக்கும் அதிகமான ஒரு முதியவர் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சீதக்காதி திரைப்படத்தில் 45 நிமிடத்திற்கும் குறைவான நிமிடங்களே நடிகர் விஜய் சேதுபதி காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news