Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல இசையமைப்பாளர்கள் – விவரம் உள்ளே

அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட அனிருத் மற்றும் இமான் ஆகியோர், நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி பேசியுள்ளனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் இமான் கூறியதாவது :

ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடை காமெடியனாக, பாடகராக, நடிகராக, பாடலாசிரியராக, முன்னணி நடிகராக, தற்போது ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நண்பனுக்காக படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் மனதை பார்க்கும்போது, அவரை பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவருக்கு கூட அவரை பிடிக்கும் என இசையமைப்பாளர் டி இமான் கூறியுள்ளார்.

அனிருத் கூறியதாவது : அருண்ராஜா எழுதின பாடல்கள் எல்லாமே செம ஹிட். அவர் இந்த மாதிரி பெண்கள் கிரிக்கெட்டை மையாமாக வைத்து ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெருமையான விஷயம். அதை ஒரு நண்பன் தயாரிக்கிறது நெகிழ்ச்சியான விஷயம். எங்க கேங் எப்பவுமே எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க, இந்த பாஸ்டிவ் நண்பர்கள் கூட இருக்கிறது மகிழ்ச்சி என அனிருத் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news