முதல் முறையாக அரவிந்த் சாமியுடன் இணையும் பிரபல நடிகை – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். இவரது இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் செக்க சிவந்த வானம் ஆகும். இந்த படம் அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.

இன்னிலையில் நடிகர் அரவிந்த் சாமி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். அரவிந்த் சாமி ஜோடியாக ரெஜினா நடிக்கும் இந்த படத்துக்கு கள்ளபார்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி ஆகும். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கள்ளபார்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தைத் தயாரித்த மூவிங் ஃபிரேம் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

ராதாகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அரவிந்த் சாமி நடிப்பில் நரகாசூரன் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. அதேபோல், ரெஜினா வசம் நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி ஆகிய படங்கள் வெளியிட்டிற்காக உள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news