சண்டக்கோழி 2 படத்தின் வெளியீட்டில் எழுந்த சர்ச்சை சோகத்தில் படக்குழு – விவரம் உள்ளே

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி ஆகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது இந்த படம் வெளியாகி உள்ளது.

லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த படம் இன்று உலகமெங்கும் [அக்டொபர் 18] வெளியாகி உள்ளது. விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இன்னிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் விஷால் நடித்த சண்டக்கோழி-2 படம் இன்று திரையிடப்படாது என திருச்சி, தஞ்சை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித் துள்ளது. இந்நிலையில் திருச்சி, தஞ்சா வூர் மாவட்ட திரையரங்க உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம், காப்பாளர் ஜோசப் பிரான் சிஸ், செயலாளர் சிதம்பரம் ஆகி யோர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

திருட்டு விசிடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 திரையரங்குகள் மீதான புகார்கள் நிலுவையில் இருக்கும்போது, அவற்றுக்கு தண்டனை தரும் விதமாக புதிய படங்களைத் தருவதில்லை என விஷால் தலைமையில் இயங்கக் கூடிய தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி, தஞ்சை ஏரியாக் களில் அக்.18 (இன்று) முதல் சண்டக்கோழி – 2 உட்பட விஷால் நடித்த எந்த படத்தையும் திரை யிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏரியாக் களில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவ தும் சண்டக்கோழி – 2 படத்தை திரையிடுவதில்லை என தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது. திருட்டு விசிடிக்களை கண்டு பிடிப்பதற்கு, அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டுமே தவிர, எங்களையே திருடர்களாக சித்தரிப்பது தவறான செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். அதேநேரத்தில் தற்போது ஓடிக்கொண்டுள்ள விஷாலின் எந்த படத்தையும் நிறுத்த மாட்டோம் என கூறியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news