வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மற்றும் மனுநீதி உள்ளிட்ட படங்களை இயக்கிய தம்பி ராமய்யா பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தினார். இவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
மைனா படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமய்யா, மணியார் குடும்பம் படத்தின் மூலம் பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் இசையில் ரூ.40 லட்சம் செலவில் என் மனசுக்குள்ள நீ புகுந்து என தொடங்கும் பாடலை டி.இமான் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வ சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.