கடந்த வருடம் நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படத்தின் வசூல் ரூ.250 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பல்வேறு சாதனைகளும் படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் ஐஏஆர்எ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்எ என்ற சர்வதேச விருதை மெர்சல் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் பெற்றுள்ளார். தற்போது அதற்கான புகைப்படங்களை விருது வழங்கிய IARA அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், 2018- ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் விஜய் விருது பெற்ற புகைப்படம் ஒன்றையும் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.