Inandoutcinema - Tamil cinema news

குரு சோமசுந்தரம் படத்தில் இணைந்த தல தளபதி நடிகை – விவரம் உள்ளே

guru somasuntharam

இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம், நடிகர் குரு சோமசுந்தரம் திரையுலகிற்குள் கால் பதித்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் ஜோக்கர் திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

guru somasundaram

இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ஓடு ராஜா ஓடு, இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் ஓடு ராஜா ஓடு படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐந்து வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் சந்திப்பதை மையமாகக் கொண்டு பிளாக் ஹியூமர் ஜானரில் ஓடு ராஜா ஓடு திரைப்படம் உருவாகியுள்ளது.

guru somasundaram

குரு சோமசுந்தரம், லட்மி ப்ரியா ஜோடி சேர்ந்து நடிக்க நாசர், ஆனந்த் சாமி, ஆஷிகா சல்வான், ரவீந்திர விஜய், அபிஷேக், நவீன் பவுல் ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் நிஷாந்த், ஜத்தின் இணைந்து இயக்கியுள்ளனர். விஜய் மூலன் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இப்படத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி படக்குழு வெளியிடயிருப்பது குறிப்பிடத்தக்கது.

simran

இன்னிலையில் ஓடு ராஜா ஓடு படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

guru somasuntharam

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news