ஒரே புகைப்படத்தை வைத்து இணையத்தில் வைரலாக்கிய தல ரசிகர்கள் – விவரம் உள்ளே

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் விஸ்வாசம். சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு விஸ்வாசம் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னிலையில் நடிகர் அஜித் ஒய்வு நேரத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். சினிமாவுக்கு அடுத்தபடியாக கார் மற்றும் ஹெலிகாப்டர் மீது அளவற்ற காதல் கொண்டவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. தனது ஓய்வு நேரங்களை இதற்காகத்தான் செலவழிப்பார் அஜித். சமீப காலமாக ஹெலிகாப்டர் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குப் சென்றுள்ளார். அஜித்தின் ஆர்வங்களுக்கு எல்லைகள் இல்லை. தனது படப்பிடிப்பு முடிந்தவுடனேயே நடிகர் அஜித் குமார் எங்களுடன் சில நாட்கள் செலவிட ஜெர்மனிக்கு விமானம் ஏறிவிட்டார். வாரியோ ஹெலிகாப்டர்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். அதேபோல், ரேஸ் கார்கள் மீதும். அவர் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் முழு கவனம் கொடுக்கிறார். அன்புடன் இருக்கிறார். தான் தங்கும் ஹோட்டலில் கூடுதலாக ஒரு அறையை எடுத்து, அதில் தனது வாரியோ மாடல்களை உருவாக்குகிறார். பகல் பொழுதில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, மாலை நேரங்களில் இது அவருக்கு நல்ல மாறுதலாக இருக்கிறது என வாரியோ ஹெலிகாப்டரின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news