தல 59 மற்றும் 60 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள பிங்க் தமிழ் ரீமேக்கில் தல அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், நேற்று டிசம்பர் 14 காலை படப்பூஜை நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். மாலையில், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்துக்கு இசையமைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் யுவன். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருப்பதாவது: இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார். தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.

அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று (டிசம்பர் 14) படப்பிடிப்பை துவங்கி, 2019-ம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம்.

அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன். இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தான் தமிழ் மொழியில் பிங்க் படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன் என போனி கபூர் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news