ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ரூபன் எடிட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தில் தனது காட்சிகள் மற்றும் டப்பிங் பணிகள் என முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார் அஜித். இன்னிலையில் தல அஜித் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க அஜித் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக். இதனை தமிழுக்கு ஏற்றவாறு முழுமையாக எழுதும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் ஹெச்.வினோத்.

நேற்றிரவு சென்னையிலுள்ள போனி கபூர் வீட்டில், போனி கபூர், அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணிகள் முடிவடைந்துவிட்டதால், மூவரும் சந்தித்து எப்போது படப்பிடிப்பு, எத்தனை நாட்கள், படக்குழுவினர் உள்ளிட்ட விஷயங்களை பேசியிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news