தடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்

தடம் – identical twins அதில் ஒருவர் செய்யும் கொலை. இருவரும் மாட்டிக் கொள்வது. கொலையை இருவரும் மறுப்பது. யார் கொலைகாரன் எதற்காக கொன்றான் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவது. உண்மையான கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பது திரைக்கதை.

தடையற தாக்க படத்தை அடுத்து மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் இணையும் படம். திரைக்கதையில் ஒரு தெளிவு. அடுத்தது என்ன நடக்கும், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் நம்மை சீட்டின் முன் இருக்கைக்கு வரவழைக்கிறார்கள்.

அழுத்தமான வசனங்கள், இரண்டே பாடல்கள், கதையை விட்டு விலகாத சீன்கள், எதிர்பாராத டிவிஸ்ட்கள் என பாசிடிவ் அதிகம் உள்ளடக்கியிருக்கிறது திரைக்கதை.

தேவையில்லாத பிளாஷ்பேக், ஓபனிங் சாங், அழுத்தம் இல்லாத சப்போட்டிவ் கேரக்டர்கள் என திரைக்கதையில் நெகடிவும் இருக்கிறது.

Tanya Hope, Arun Vijay in Thadam Movie Stills HD

முகில், கவின் என இருவராக நடித்திருக்கும் அருண்விஜய். நடிப்பில் கற்று தேர்ந்தவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். படத்தின் முழு சுமையையும் தாங்கி இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்து கண்டிப்பாக பாராட்ட வேண்டிய கேரக்டர் வித்யா பிரதீப். போலீஸாக வருகிறார். கேஸில் உள்ள முடிச்சுகளை அவிழ்பது முதல் நல்லவர்கள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக அவர் செய்யும் செயல்கள் வரை அனைத்திலும் ஒரு எதார்த்தமான பெண் போலீசாக இயல்பாக வந்து செல்கிறார்.

Actress Vidya Pradeep in Thadam Movie Stills HD

மீரா கிருஷ்ணன், யோகிபாபு, பெப்ஸி விஜயன், தன்யா ஹோப், ஜார்ஜ் மரியான் இவர்கள் அனைவரும் படத்தில் இருக்கிறார்கள். சில இடங்களில் தாங்களும் நடிப்பில் கைதேந்தவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தகுந்த தீணி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மாவாக சோனியா அகர்வால். அதனால் அவரை திரையில் பார்த்த முதல் காட்சியிலிருந்து அவரிடம் அதிகம் எதிர்பாத்து ஏமாந்து விட்டோம்.

இயக்குநர் மகிழ்திருமேணி ஆக்‌ஷன் திரில்லர் எடுப்பதில் கைதேர்ந்தவர். அதுவும் identical twins என்னும் கருவை வைத்து சில உண்மை சம்பவங்களில் மூலம் அவர் எழுதி உருவாகி இருக்கும் தடம் உண்மையிலேயே தடம் பதித்துள்ளது. முன்னர் கூறியது போல் மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு வலு சேர்த்திருந்தால் இந்த தடம் அழிக்க முடியாமல் இருந்திருக்கும்.

ஒளிப்பதிவு கோபிநாத் மற்றும் அறிமுக இசை அருண் ராஜ் சிறப்பாக தங்கள் பணிகளை செய்து இருக்கின்றனர். பின்னனி இசை படத்திற்கு பலம். எடிட்டர் ஸ்ரீகாந்த் அவருடைய அனுபவத்திற்கு; அந்த பிளாஷ்பேக் போஷனை வெட்டி இருந்திருக்கலாம். செய்திருந்தால் கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் தடம் அருண் விஜய்க்கு இன்னொரு முறை தடம் பதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தடம் : 3/5

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news