இன்று முதல் #photographerpalanisamy என்று அழைக்கபடுவாயாக… – டிவிட்டர் டிரெண்ட்ஸ்

சென்னை: பத்திரிகையாளர்களிடம் தான் ஒரே தொகுதியில் 9 முறை வென்றுள்ளதாகவும், படம் எடுப்பதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றதாகவும் ஏடாகூடமாக பேசி நெட்டீசன்களிடம் சிக்கி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த வாரம் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், என சுமார் 8க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் கடும் சேததை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனால், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் ஆடுமாடுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து விட்டு தவித்து வருகின்றனர்.

புயலுக்கு முன்பு அனைத்து முன்னேர்பாடு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு புயலுக்கு பின்னர் நிர்வாரணப் பணிகளை விரைந்து செய்ய முடியாமல் தினறியது. கூறிப்பாக பாதிக்கப்பட்ட உள்மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் இருந்த மக்களை கவணிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பல இடங்களில் சாலை மறியல், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரிடர் நிகழ்ந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இன்னும் பல இடங்களில் மின்சாரம், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலா பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். மேலும், ஒரு சில இடங்களில் ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்ளை பார்வயிட்டார் முதல்வர். அப்போது, பொதுமக்களை சுமார் 50 அடி தூரத்தில் நிறுத்திவிட்டு முதல்வர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

முதல்வரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, நெட்டீசன்கள் சமூக வலைத்தளங்களில் முதல்வரை கண்டபடி ஏசியுள்ளனர். இந்நிலையில், ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து எடப்பாடி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, புகைப்படம் நான் ஒரே நாளில் 4 மாவட்டங்களுக்கு சென்று பாதிப்புகளை பார்வையிட்டுள்ளேன், அதற்கான ஆதரம் என்னிடம் உள்ளது, மேலும், ஒரே தொகுதியில் நின்று 9 முறை வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார்.

இதை சமூக வலத்தளங்களில் நெட்டீசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

தமிழகத்தின் போட்டோகிராப்பரா இவர் என்று கேட்டுள்ளார்

 

 

 

 

 

இவர் அந்த போட்டோ எல்லாம் ஹெலிகாட்பரில் இருந்து எடுத்த மாதிரி தெரிவில்லையே என்று கூறியுள்ளார்.

 

 

 

 

இன்று முதல் நீ போட்டோகிராப்பர் பழனிசாமி என்று அழைக்கப்படுவாயாக என்று இவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும், தான் ஒரே தொகுதியில் நின்று 9 முறை வெற்றி பெற்றேன் என்று கூறியதை தொலைக்காட்சி ஊடகள் விரிவாக அதை விளக்கி உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news