Inandoutcinema - Tamil cinema news

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு – ரெயின் மேன் கணிப்பு

சென்னை: தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதே போன்று இன்று காலையும் அநேக இடங்களில் மழை கொட்டிதீர்த்தது. இந்த மழை இன்றிலிருந்துத்து அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை வானிலை ஆய்வும் மைய அதிகாரிகள் கூறுகையில், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்தகாற்றழுத்த தாழ்வு நிலை வரும் 6ம் தேதி மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக திவிரம் அடைகிறது.

இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஓரீரு இடங்களில் கணமழைக்கு வாய்ப்பிருகிறது. சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே மீனவர்கள் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், 6ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news