September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் கமல்ஹாசன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறார் என கூறும் பிரபலம்

நடிகர் கமல் ஹாசன் ரஜினியை உதாசினப்படுத்தும் விதமாக காலா படம் முக்கியமில்லை காவிரி தான் முக்கியம் என கருத்து கூறினார். இதற்க்கு சில ரஜினி ரசிகர்கள் கமலை வசைபாடி எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னிலையில் இது பற்றி தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் வார்த்தைத் தடுமாற்றமின்றி பேசுவார். மேடையில் பேசுவது போலவே தனது தனிப்பட்ட வாழ்வில் எளிமையோடு நடந்துகொள்பவர். இவர் தற்போது நடிகர் கமல் ஹாசனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது : ரஜினிகாந்த், மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெறக் கூடாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது.

ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில், அவருடைய தனிப்பட்ட நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம். சமூக வலைதளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன்பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news