சென்னை: மலையால நடிகர் டோவினோ தாமஸ் தமிழில் அறிமுகமாகியுள்ள ‘‘அபியும் அனுவும்’’. இப்படத்தில், பியா பாஜ்பாய் சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளரான பி.ஆர்.விஜயலட்சுமி இப்படத்தை இயக்கியுள்ளார். சரிகம இந்தியா லிமிடெட் சார்பில் யொட்லி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் டோவினோ தாமஸ் கூறியுள்ளதாவது: தமிழ் ரசிகர்கள் அபியும் அனுவும் படம் என்னுடைய முதல் படம் என தெரிந்ததும், என்னை சிறப்பாக உணர வைத்துள்ளார்கள். அவர்களின் அன்பும், நல்ல மனதும், பெருந்தன்மையும் என்னை மேலும் பொறுப்புடையவனாக உணர வைப்பதோடு, அவர்கள் விரும்பும் விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று என்னை உந்துகிறது.
இப்படத்தில் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமியோடு வேலை செய்தது ஒரு உண்மையான பேரின்பம். அவர் கதையின் பின்புலத்தை அமைத்த விதமும், ஒளிப்பதிவாளர் அகிலன் அவருடைய ஐடியாவை திரையில் மாற்றிய விதமும் எல்லோராலும் பாராட்டக்கூடியது.
நடிகை பியா பாஜ்பாய் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாக இருப்பார். ஆனால் கேமரா லென்ஸுக்கு முன்னால் நடிக்கும்போது அவருடைய மாற்றம் நம்ப முடியாதது’‘ என்றார்.