Inandoutcinema - Tamil cinema news

இரட்டை வேடம் போடும் தமிழக அரசு. வருதேடுக்கும் இணையவாசிகள். விவரம் உள்ளே

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்க்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இது பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளாமல் சாலை அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னிலையில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆணைய கூட்டம் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது : தமிழகத்துக்கு 31.24 டிம்.எம்.சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டுக்கு 45.9 டிஎம்.சி செப்டம்பருக்கு 36.76 டிம் எம் சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரிநீர் கிடைத்தே தீரும். வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என காவிரி ஆணைய தலைவரே கூறியுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பசுமை சாலை திட்டத்திற்காக நிலங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் பற்றி தமிழக முதல்வர் யோசிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு புறம் விவசாயிகளுக்கு எதிராகவும் மற்றொரு புறம் ஆதரவாகவும் இருப்பதாக தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news