Inandoutcinema - Tamil cinema news

தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை மூடு – இயக்குனர் விக்ரமன்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராடி வருவது நமக்கு தெரிந்ததே. அதில் இதுவரை 13 பேர் துப்பாக்கி குண்டிற்கு இரையாகி இருப்பது மிகவும் வருந்துதற்குரியது. அதனைக் கண்டித்து மக்கள் பலரும் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர்.

பல்வேறு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் இயக்குனர் விக்ரமன் அவர்கள் 24.05.2018 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: 29.03.2013 அன்று, அன்றைய தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உடனே உத்தரவிட்டார். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவை திரும்பப் பெற்று மீண்டும் ஆலையை நடத்தியது. அன்றே ஆலையை நடத்தக் கூடாது என்று ஒரு நிரந்தரமான தடையைப் போட்டிருந்தால் இன்று நாம் 13 உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.

இதற்கு நிரந்தர தீர்வு காண உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news