Inandoutcinema - Tamil cinema news

“ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்?

சென்னை: உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையுடன் குஜராத் மாநிலம், நர்மதா ஆற்றின் குறுக்கே 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்!?

“statute of unity” என்று இந்த சிலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெரியரிலேயே ஒற்றுமை இல்லை என்பது தான் வேதனை. இந்த சிலையை காண உலகளவில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பணியல் வருவார்கள் என்பதால் சிலையின் முகப்பில் உலகின் 10 முக்கிய மொழிகளில் சிலையின் பெயர் மொழிமாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “statute of unity” என்றால் தமிழில் “ஒற்றுமையின் சிலை” என்று மொழி மாற்றம் செய்வதற்கு பதிலாக “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என்று இந்தி ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல ஆயிரம் நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து ஒரு சிலைக்கட்டப்படுகிறது. அதில் இவ்வளவு பெரிய பிழை இருப்பது யார் கண்ணுக்கும் தெர்யவில்லையா என்று தமிழ் மொழி ஆர்வலர்களும் எதிர்கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உடனடியாக தமிழில் இருந்த பெயர் அழித்துள்ளனர்.

மேலும் பாஜக தறப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வல்லபாய் படேல் சிலை பெயர் பலகையில் உள்ள பிழைப்பற்றி அமைச்சர் நிர்மரா சீதாராமனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இதை பெரிதுப்படுத்தி பார்க்க வேண்டாம். இதில் எந்த அரசியலும் இல்லை. தமிழ் மொழியை கேவளப்படுத்துவதற்காக செய்தார்கள் என்று கூறுவது தவரான தகவல். என்று கூறப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபா படேல் சிலை கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி செலவில் வெரும் 42 மாதங்களில் (மூன்றரை ஆண்டுகள்) உலகின் அதிவிரைவில் கட்டப்பட்ட சிலை என்ற சாதனையும் படைத்துள்ளது. ஆனால், இதுவரை தமிழில் தவறாக எழுதியிருந்த அந்த வாசகத்துக்கு அர்த்தம் தான் புரியவில்லை. அப்படினா என்ன பாஸ்?

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news