September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்க்கார் நாயகி வெளியிட்ட படப்பிடிப்புதள காணொளி – விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் முதல்–அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இன்னிலையில் நடிகை வரலட்சுமி ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சர்கார் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது, இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்த சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி எனவும் விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

விஜயுடன் பணியாற்றுவது நீண்ட நாள் கனவாக இருந்தது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது. பட்டாசை ரெடி பண்ணுங்க என ட்வீட் செய்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news