September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இளம் நடிகையுடன் ஜோடி சேர்வதை ரஜினிகாந்த் தவிர்த்ததால் அவருக்கு இணையாக மூத்த கதாநாயகி ஒருவரை தேடி வந்தனர். தற்போது சிம்ரன் தேர்வு செய்யப்பட்டு ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news