விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் 2 ஆகும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே.
இந்த நிகழ்ச்சியில், அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்றாயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத், டேனியல் ஆகிய 9 பேரும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய வரவாக நடிகை விஜயலட்சுமி வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். கடைசியாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட டேனியல், தனது காதலியான டெனிஷாவைக் கரம் பிடித்துள்ளார்.
இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் நடிகர் டேனியல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. திரை பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.