Inandoutcinema - Tamil cinema news

மெகா பட்ஜெட் படத்திற்கு நடிகை தமன்னா வகுக்கும் அதிரடி திட்டம்

நடிகை தமன்னா விக்ரமின் ஸ்கெட்ச் படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் வங்கி அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்து வெளியிட்டுக்காக காத்திருக்கிறது. மேலும், சிரஞ்சீவி நடிக்கும் அடுத்தப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் தமன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை தமன்னா.

சுமார் 150 கோடி ருபாய் செலவில் உருவாகும் இப்படத்தின் வரும் கதாபாத்திரத்திரத்திற்காக இவர் பரதநாட்டியம் பயின்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சை ரா நரசிம்ம ரெட்டி படம் தெலுங்கு தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தையே நடிகை தமன்னா பெரிதும் நம்பியிருக்கிறார். அவைமட்டுமின்றி இந்தப் படத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமிதாப் பச்சன் இதில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். தற்போது தனது இடத்தை தக்க வைத்துகொள்ள போராடி வருகிறார்.அதனால் நடிகை தமன்னா சை ரா நரசிம்ம ரெட்டி படத்தை நம்பியிருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news