Tag Archives: yashika anand

இப்படி தான் வாய்ப்பு வருகிறது: யாஷிகா

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான யாஷிகா, முதல் படத்திலேயே, படு கவர்ச்சியாக நடித்தார். தொடர்ந்து, சில படங்களில் அப்படியே நடித்த தோடு, தன் கவர்ச்சி படங்களை, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து, யாஷிகா கூறுகையில், ”என் அழகை வெளிப்படுத்துவதில், என்ன தவறு? கவர்ச்சி தான், எனக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறது,” என்றார்.

யாஷிகா எதிர்பார்க்கும் படம்

புவன்.ஆர்.நுல்லன் இயக்கிஉள்ள, ஸோம்பி- காமெடி பாணியிலான படத்துக்கு, ஸோம்பி என்றே, பெயர் சூட்டியுள்ளனர். யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ‘பிக்பாஸ்’ யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர். பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து, யாஷிகா ஆனந்த் கூறுகையில், ”காமெடி படமான இதில், சண்டை காட்சிகளும், நிறைய உள்ளன. இவற்றில், டூப் போடாமல், நடித்துள்ளேன். நான் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது,” என்றார். இப்படம், நாளை வெளியாகிறது.

ஜாம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் கேரக்டர் இதுதான்.

யோகிபாபு இப்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறி வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஒன்று ஜாம்பி. இந்த படத்தில் இவருடன் யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளார். மிருதனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் உருவாகும் ஜாம்பி பாடம் இது. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் டாக்டராக நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போட்டோவை தது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் புவன்.

திரைக்கு வர ரெடியாகும் ராஜபீமா

பிக்பாஸ் ஆரவ் நடித்து கொண்டிருக்கும் படம் ராஜ பீமா. இந்த படம் கும்கியை போல யானையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குநர் நரேஷ் சம்பத். இந்த படத்தில் பிக்பாஸை சேர்ந்த ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் கேமியோ ரோல் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஓவியாவை தொடர்ந்து யாஷிகாவின் அடல்ட் படம்

இந்த பிக்பாஸ்ல இருந்து வந்தவங்களுக்கெல்லாம் வேற எதுவுமே தெரியாதா என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டனர் பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள். பிக்பாஸில் இருந்து வந்து ஓவியா நடித்த படம் 90 எம்.எல். அது ரசிகர்களிடம் நெகடிவ் கமெண்டுகளை பெற்றது. இப்பொழுது பிக்பாஸ் யாஷிகா 18+ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரியஸ் நடித்து வருகிறார். இதுவும் அடல்ட் கதைதான் என்பது டைட்டிலிலேயே தெரிகிறது. படத்திற்காவது சென்சார் இருக்கிறது. வெப் சீரியஸிற்கு சென்சார் என்பதே கிடையாது என்ன மாதிரி இருக்கும் […]

யாஷிகானா சர்ச்சை, சர்ச்சைனா யாஷிகா

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து மூலம் பிரபலமானவர். பின்பு பிக்பாஸ்-2 வில் கலந்து கொண்டு அவர் செய்த அட்டகாசம் சொல்ல முடியாது. அதிலிருந்தே சர்ச்சையில் சிக்கி கொண்டே இருக்கிறார். பிக்பாஸ் 2வில் மஹத்துடன் லீலைகள். ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டு மாட்டிய பிரச்சனை. அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து நெட்டிசன் கலாய்ப்பது என அவரது பெயர் என்றாலே சர்ச்சைகள். இந்நிலையில் அவர் சிகரெட் பாக்கெட்டுடன் இருப்பதை போல் வெளியிட்டிருக்கும் புகைபடம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் […]

புகழை விரும்பி பிரச்சனையில் சிக்கிய யாஷிகா.

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 மற்றும் இருட்டறையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் பிரபலமானவர். அவருக்கு இப்பொழுது கையில் அதிக படங்கள் இருக்கிறது. யாஷிகா ஆனந்தை இப்பொழுது தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவு அவருக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டதற்கு 200 ரூபாய் நோட்டில் கையெழுத்து இட்டு கொடுத்திருக்கிறார். இதனால் புகழ் தேடி அவர் சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news