Tag Archives: weather in chennai now

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் லேசான முதல் மிதமான மழைக்கும் ஒரிருஇடங்களின் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!!

சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. உதகையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேங்கிக்கால், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் மிதமான […]

சென்னையில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை!!!

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், அரை மணிநேரம் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோன்று சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மிதமான மழை பெய்தது.  இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான சாலைகளில், தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தட்டுபாடு காரணமாக சென்னைவாசிகள் அவதியுற்று வரும் சூழலில், தற்போது பெய்து வரும் மழையினால், மக்கள் […]

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று […]

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக பகுதியில் காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெப்பச் சலனமும் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. திருவள்ளூர், கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், ஈரோடு, திருண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக […]

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஒருசில […]

இயற்கையே நமது ஆதாரம் – அதிகரிக்கும் வெப்பம்! தவிக்கும் பூமி!

இயற்கை 1 பூமி வெப்பமயமாதல் என்பது நச்சுக்கலந்த வாயுகளின் நிலை அதிகரிக்கும் பொது பூமி மீது ஏற்படும் வெப்பநிலை மாற்றமே பூமி வெப்பமயமாதல். காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன் போன்ற வாயுகளின் அளவு அதிகரிக்கும் பொது அதுவே நச்சுக்கலந்த வாயுவாக மாறுகிறது.சூரியனிடமிருந்து வரும் கதிர்விச்சுயின் அளவை இது போன்ற நச்சுக்கலந்தா வாயுகள் தடுப்பதால் வெப்பம் அதிகரிக்கிறது. உலகம் வெப்பமயமாதலின் சில முக்கியமான காரணங்கள், நம்மில் பல பேர் மின்பொருளில் […]
Inandoutcinema Scrolling cinema news