Tag Archives: vijay sethupathi villain

‘காக்கா முட்டை’மணிகண்டன் இயக்கத்தில் ” கடைசி விவசாயி”விஜய் சேதுபதி

காக்கா முட்டை” இயக்குநர் மணிகண்டன் குறும்படங்கள் இயக்கும் காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியும், மணிகண்டனும் நண்பர்கள். இது திரை வாழ்விலும் தொடர்ந்தது. விஜய் சேதுபதியை வைத்து, அவர் இயக்கிய ”ஆண்டவன் கட்டளை” திரைப்படம் வசூலில் கலக்கிய படமாகவும், அதே நேரத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லும் தரமான படமாகவும் இருந்தது. இதன் பிறகு புதுமுகத்தை வைத்து ”கடைசி விவசாயி” படத்தை தன் சொந்த முயற்சியில் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இந்த முயற்சி சரியாக நடைபெறவில்லை. வித்தியாசமான […]

விஜய் சேதுபதியின் சிந்துபாத் ரிலீஸ் தேதி! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

பாகுபலி தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் வருகிற 29 ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் மேற் கொண்ட முயற்சியினால், பாகுபலி படத்திற்கான 18 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது

சைரா நரசிம்மஹ ரெட்டி படத்தின் பணி நிறைவு: ரத்னவேலு அறிவிப்பு

தெலுங்கில், சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இந்தியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரத்னவேலு, தனது ட்விட்டர் பக்கதில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். […]

”விஜய் சேதுபதிக்கு ஒரு வேண்டுகோள்”- நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!?

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் ஒருசில காரணங்களால் கடந்த ஜூன் 21தேதி வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது சிந்துபாத் படத்தின் ரிலீஸ் ஜூன் 28ந்தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் ஜூன் 28ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி  சமூகவலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு […]

மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்து கிடக்கின்றன. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் ரம்மி […]

இது விஜய் சேதுபதியின் படமா !? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது,விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தை தொடந்து இன்று வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுதல்களை வாரி குவித்து வருகிறது சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சில தகவல்கள்: ஆரண்ய காண்டம்,என்னை அறிந்தால்,சீதக்காதி போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இவர் இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ், இன்று […]

வில்லனாகும் விஜய் சேதுபதி – யாருக்கு?

விஜய் சேதுபதி தமிழில் எண்ணற்ற படங்கள் கையில் இருக்க, அவரது கால்ஷீட்டிற்காக இன்னும் பல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் காத்து வருகின்றனர். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் ஒரு படம் நடிக்கிறார். இப்பொழுது சீரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஒரு புது ஸ்டைல் ரோல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Inandoutcinema Scrolling cinema news