Tag Archives: telugu movies

மீண்டும் அரசியல் பேசும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி மூலம் பெரிய ஹீரோ என தன்னை முத்திரை பதித்து கொண்டவர். அவர் நடித்த கீதா கோவிந்தமும் அவருக்கு 100 கோடி வசூலை பெற்று கொடுத்தது. தமிழில் அவர் நடித்த முதல் படம் நோட்டா. நோட்டாவில் அவர் பேசிய அரசியல் பெரிதாக ரசிகர்களிடம் எடுபடவில்லை. இப்பொழுது டியர் காம்ரேட் என்ற படத்தில் ஸ்டூடண்ட் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இளைஞர்களுக்கான அரசியல் போல் தெரிகிறது. இந்த படத்தில் அவர் பேசும் அரசியல் […]

சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

நயன்தாரா. தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் மார்கெட் உடைய லேடி சூப்பர் ஸ்டார். தற்பொழுது கைகளில் நிறைய படம். விஜயுடன் விஜய்-63, ஐரா, கொலையுதிர்காலம், தெலுங்கில் நரசிம்ம ரெட்டி. இன்னும் பெயரிடப்படாத பெரிய ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். இப்பொழுது சீரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஹீரோயினாக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கொரட்ல சிவா இயக்குகிறார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். படம் மார்ச் […]

நடிகை சார்மி தயாரிக்கும் படம் – ஐ ஸ்மார்ட் சங்கர்

நடிகை சார்மி. பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தில் பங்கு வகிப்பவர். இது தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆரம்பிக்கும் படம் ஐ ஸ்மார்ட் சங்கர். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். நடிகர் ராம் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படம் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. நடிகை சார்மி இந்த படத்தின் தயாரிப்பை மேற்பார்வை இடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ஒரு மல்டி பெர்ஸ்னாலிட்டி டிஸார்டரை மையமாக கொண்டு […]

மகேஷ் பாபுவின் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது

மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் மஹரிஷி. இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இந்த சங்க்ராந்திக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் பரத் என்னும் நான் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

தமன்னாவின் புதிய படத்தின் டிரைலர் மில்லியனை தொட்டது.

தமன்னா நடிக்கும் தெலுங்கு படம் frustration-2. இந்த படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண்தேஜ் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளிவந்த சில மணிநேரங்களிலேயே 2 மில்லியன் ரசிகர்களால் பார்க்கபட்டு பாராட்டை பெற்றுள்ளது.

நீச்சல் உடையில் ஒரு பேட்டி – நடிகையின் துணிச்சல்

நடிகை சுவாதி கண்கள் இரண்டால் பாட்டின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை அவர் பிரபல டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் வித்தியாசத்தை கொண்டுவர அவர் செய்த காரியம் தான் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. நீச்சல் உடையில் அவர் கொடுத்த பேட்டிதான் அது. இதன் மூலம் மீண்டும் நான் படங்களில் நடிக்க ரெடி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்றும், அதோடு மட்டும் […]

பேட்ட ட்ரைலரை மிஞ்சிய ராம்சரண் ட்ரைலர்?

பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் பார்த்த ரஜினையை திரும்ப பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படத்தில் மாஸ் மரணமாக உள்ளது என்றும், வசனங்கள் வேற லெவல் என்றும் கருத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திடன் ட்ரைலரை எந்த அளவு கொண்டாடுகின்றனரோ அதே அளவு தெலுங்குசினிமாவில் ராம் சரணின் ட்ரைலர் கொண்டாடப்படுகிறது. ராம் சரணின் வினய வித்ய ராம படத்தின் ட்ரைலர் தான் அது. ராம்சரணின் மாஸ் மற்றும் பவர்ஃபுல் […]

நடிகர் NTR வரலாறு படத்தின் டிரைலர்- பாலகிருஷ்ணா மகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகில் மறக்க முடியாத நடிகர் என்.டி.ராமாராவ் அவர்கள். அவரது மறைவிற்கு பின் அவரது வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு அதை முடித்துள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா. அந்த படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய பாராட்டை பெற்றது. அதனால் பாலகிருஷ்ணா அதிக சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. என்.டி.ராமாராவ் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டும் இல்லை. அவர் ஆந்திரா மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் ராம்சரணின் நடிப்பை பார்த்து நெகிழ்ந்த சிரஞ்சீவி

நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படம் “வினய வித்ய ராமா”. இந்த படத்தை போயப்பட்டி ஸ்ரீனு இயக்குகிறார். ஹிந்தி பட நாயகி கீரா அதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிநேகா, பிரசாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் “தசாடியா” என ஆரம்பிக்கும் பாடலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதன் வீடியோ தொகுப்பில் நடிகர் சிரஞ்சீவி தனது மகனின் நடிப்பை பார்த்து சந்தோஷ் அடைவது போல காட்சி இணைக்கப்பட்டுள்ளது. ராம்சரணுக்கு முந்தைய படங்களில் ரங்கஸ்தலம் […]

பாகுபலி ஹீரோவின் அடுத்த பிரமாண்டம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

பாகுபலியின் நாயகன் பிரபாஸ் நடித்து கொண்டிருக்கும் பெரிய பட்ஜட் திரைப்படம் சகோ. இந்த படத்தை இயக்குநர் சுஜித் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ஷாரதா கபூர் மற்றும் அருண் விஜய், நீல் நிதின் முகிஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் எப்பொழுது ரிலீஸ் என்று அறிவிக்கப்படவில்லை. ரசிகர்களின் விருப்பதை தொடர்ந்து இந்த பிரமாண்ட படைப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் 15 சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிப்பு […]
Inandoutcinema Scrolling cinema news