Tag Archives: tamil movie updates

ரைசா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் – காபியா?

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அலைஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை மணி சந்த்ரு இயக்குகிறார் இந்த படத்தின் போஸ்டரில் ரைசா கண்ணை கட்டியவாறு இருக்கிறார். இதே போன்று ஒரு ஹாலிவுட் படம் பேர்டு பாக்ஸ் பட போஸ்டரிலும் ஹிரோயின் கண்களை கட்டி கொண்டு இருப்பார். இந்த இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என சினிமா வட்டாரங்கள் பேசுவதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அலைஸ் […]

பேரன்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ராமின் பேரன்பு. படத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி நடித்துள்ளனர். படம் ரெடி ஆகி பல விருதுகளுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பற்றி பல சினிமா பிரபலங்களும் பெருமையாக கூறியுள்ளனர். இந்த படத்தை பார்க்க ரசிகர்களுக்கும் ஆவல் அதிகம் உள்ளது. அதனால் இன்னும் தாமதம் செய்யாமல் படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு கலக்க வரும் சந்தானம்.

சந்தானம் நடித்து பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம் தில்லுக்கு துட்டு. அதன் தொடர்ச்சியாக தில்லுக்கு துட்டு -2 திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன் முதல் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் இரண்டாவது டீசரை பொங்கல் தினத்தன்று வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர். இந்த தகவலை அறிந்து சந்தானம் ரசிகர்கள் டீசரை பார்க்க அதிக ஆவலாக இருப்பதாகவும் படத்தின் ரிலீஸ் எப்பொழுது என்று கேள்வி கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷால் மீண்டும் கைது – வைரலாகும் போட்டோ

நடிகர் சங்க தலைவர் விஷால். சர்ச்சைக்கும் அவருக்கும் இப்பொழுது அதிக உறவு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாதங்களாக அவர் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டது போல் வெளியான புகைபடம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை. அது அவர் நடிக்கும் அயோக்யா படத்தின் ஷூட்டிங் ஸ்டில் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் 63-ல் இணையும் காமெடி நடிகரின் மகள்

விஜய் 63, கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் நடிக்க இருப்பதாக கூறிய தகவல் நமக்கு தெரிந்தது. இப்பொழுது வெளியான மற்றுமொரு தகவல் என்னவென்றால் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் விஜய்-63ல் நடிக்க இருக்கிறார் என்பதுதான். பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், மகளின் படிப்பிற்காக அதை தள்ளி வைத்ததாக சொல்லும் ரோபோ சங்கர், இந்த […]

பஞ்சராக்‌ஷ்ரம் ட்ரைலர் – பேய் படமா?

பஞ்சராக்‌ஷ்ரம் படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் பிரதாப் மற்றும் மதுஷாலினி நடிக்கும் படத்தின் இயக்குநர் பாலாஜி வைரமுத்து . இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது படம் பேய் படமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news