Tag Archives: Superstar Rajinikanth

சத்தியமா அரசியல் பேசலங்க – விஜய்காந்த் ரஜினிகாந்த் சந்திப்பு

விஜயகாந்த் அமெரிக்காவில் பூரண உடல்நலம் பெற்று தாயகம் திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து நலன் விசாரிப்பதாக கூறி கூட்டணி உடன்பாடுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்காந்தை நேரில் சந்த்தித்து நலன் விசாரித்து இருக்கிறார். இவர் நலன் விசாரிக்க சென்றாறா இல்லை கூட்டணி யாருடன் என்று கேட்க சென்றாறா என்ற குழப்பம் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக அவர் நலன் விசாரிக்கதான் சென்றிருப்பார், ஏனென்றால் அவர் […]

இளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்

தயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். அதற்கு முதற்கட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று பார்த்து அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனது கடமை என மகிழ்ச்சியுடன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை – முருகதாஸ்

ரஜினிகாந்த் நடித்து வெளி வந்திருக்கும் பேட்ட, வசூலில் சாதனை படைத்துள்ளது. இதன் பிறகு ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படத்திற்கு நாற்காலி என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்திற்கு நாற்காலி என்ற டைட்டில் இல்லை என்றும், யாரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார். சர்கார் படம் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டதன் பின்னனி தான் நாற்காலி என்ற டைட்டிலை முருகதாஸ் மாற்றம் செய்கிறார் […]

அண்ணாமல உன்ன இப்படி பாத்து எத்தன வரும் ஆச்சு !

ரஜினியின் பேட்ட படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி பக்தர், பேட்ட படத்தை ஒரு ரஜினியின் ரசிகனாகவே எடுத்துள்ளார். பேட்ட படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் அண்ணாமலை, முத்து, பாட்சா படங்களில் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறார் என்று கருத்து கூறி வந்தனர். இதனை மீம் கிரியேட்டர்கள் காண்சப்டாக எடுத்துகொண்டு அண்ணாமலை படத்தில் மனோரம்மா பேசும் வசனத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது பேட்ட படத்தின் ஹாஷ்டெக்குகளுண்ட சேர்ந்து இந்த வீடியோவும் டிரெண்டாகி […]

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

நாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. […]

பேட்ட படத்திற்கு தியேட்டர் இல்லை? தெலுங்கு சினிமா

பேட்ட படம் வரும் 10 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் பல திரயரங்குகளை கைப்பற்றிய பேட்ட படக்குழுவினருக்கு தெலுங்கு சினிமா அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலுங்கில் பேட்ட படத்திற்கு போதிய தியேட்டர்கள் இல்லை. காரணம் தெலுங்கில் முன்னனி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம்சரன் மற்றும் வெங்கடேஷ் நடிக்கும் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யபடுவதால் இந்த பிரச்சனை என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news