சென்னை: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. அதன்படி 2018 – 20க்கான பத்திரிகை தொடர்பாளர்கள் (PRO) சங்க தேர்தல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கிரிதரன் மேற்பார்வையில் நேற்று நடந்தது. இதில் தலைவராக விஜயமுரளி, பொது செயலாளராக பெரு.துளசி, பொருளாளராக யுவராஜ், துணை தலைவர்களாக கோவிந்தராஜ், ராமானுஜம், இணை செயலாளர்களாக குமரேசன், ஆனந்த் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக வி.பி.மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் […]