சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தர்ஷன் நடித்துள்ளார். இவரது […]