Tag Archives: sivakarthikeyan next movie

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ !!

மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதன்பிறகு மீண்டும் அவரது இயக்கத்தில் விமலுடன் இணைந்து ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் பாண்டிராஜ் இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப்பிள்ளை’ தலைப்பை வைக்க திட்டமிட்டனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிட்டது. இதனால் படத்திற்கு ‛நம்ம வீட்டுப்பிள்ளை’ என்று தலைப்பு வைத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  இந்த […]

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தாமதமாகும் காரணம் என்ன…?

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்து, ‘இரும்புத்திரை’ புகழ் பி.எஸ் மித்ரன் இயக்கும் படம் ‘ஹீரோ’. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஏன் இந்த படம் அவ்வளவு காலம் தாழ்ந்து வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் விளக்கம் அளித்து பேசியபோது…  மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க […]

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” மிகப்பெரிய பட்ஜெட் படம்- ஜே ராஜேஷ்

2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் “ஹீரோ”, ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களை கூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.  படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, “ஆம், போஸ்டர்களும் காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் […]

சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”

பாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம்! சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க […]

திரை வெளியீட்டுக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் ”வாழ்”

கனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார்.  அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல் நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது. படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான  சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.  படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்ப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட்ப்ரொடக்ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது.  பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள், ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு ராணுவவீரர்கள்  என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர்படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது. ‘அருவி’யைப் போலவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்இப்படத்திற்காக, படக்குழு இதுவரை சினிமா கேமராவில்பதிவாகாத பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்புநடத்தியுள்ளதாக கூறப்படுக்கிறது.  ‘வாழ்’ திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையைப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஶ்ரீராமனும்செய்கிறார்கள்.  […]

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் […]

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! !

மிஸ்டர்.லோக்கல், அடுத்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகினார். ஹீரோ என்று பெயரிடப்பட்ட அப்படத்திற்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். நாச்சியார் படத்தில் நடித்த இவானாவும் இதில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் […]

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு பக்கம் பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் படம் கனா, இரண்டாவது படம் யூ-ட்யூப் பிரபல குழுவான பிளாக் ஷீப் டீமை வைத்து  ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்று இரு படங்களை தயாரித்து, வெற்றி பெற்றுள்ளார். […]

சிவகார்த்திகேயனுடன் கைகோக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – எஸ்கே 17

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவனின் நெறுங்கிய நண்பரான அனிருத்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, and டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது […]

‘அருவி’ இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது. இந்த நிலையில் நெஞ்சம்முண்டு நேர்மை உண்டு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news