Tag Archives: sivakarthikeyan movie

தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

தெலுங்கில் பவண் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தி மற்றும் தமிழில் உருவான பிங்க் படத்தின் தெலுங்கு பதிப்பில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் நடிக்க இருக்கிறார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே வேறு ஒரு முக்கிய தயாரிப்பாளரோடு இணைந்து இந்த படத்தையும் […]

சிவகார்த்திகேயன் துவக்கி வைத்த புதிய படம்…

ரேடியோ ஆர்.ஜெ.,வாக இருந்தவர் விக்னேஷ் காந்த். இவர், பிளாக்ஷீப் என்ற யு-டியூப் சேனலையும் நடத்தி வந்தார். இதன் பின், தேவ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, மீசைய முறுக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருந்தார். இந்நிலையில், பிளாக்ஷீப் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி இருக்கும் இவர், ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புது படம் ஒன்றை தயாரிக்கிறார். அந்தப் படத்தில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் […]

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ !!

மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதன்பிறகு மீண்டும் அவரது இயக்கத்தில் விமலுடன் இணைந்து ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் பாண்டிராஜ் இயக்கும் கிராமத்து கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப்பிள்ளை’ தலைப்பை வைக்க திட்டமிட்டனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிட்டது. இதனால் படத்திற்கு ‛நம்ம வீட்டுப்பிள்ளை’ என்று தலைப்பு வைத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  இந்த […]

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தாமதமாகும் காரணம் என்ன…?

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்து, ‘இரும்புத்திரை’ புகழ் பி.எஸ் மித்ரன் இயக்கும் படம் ‘ஹீரோ’. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஏன் இந்த படம் அவ்வளவு காலம் தாழ்ந்து வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் விளக்கம் அளித்து பேசியபோது…  மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க […]

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் […]

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! !

மிஸ்டர்.லோக்கல், அடுத்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகினார். ஹீரோ என்று பெயரிடப்பட்ட அப்படத்திற்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். நாச்சியார் படத்தில் நடித்த இவானாவும் இதில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் […]

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு பக்கம் பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் படம் கனா, இரண்டாவது படம் யூ-ட்யூப் பிரபல குழுவான பிளாக் ஷீப் டீமை வைத்து  ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்று இரு படங்களை தயாரித்து, வெற்றி பெற்றுள்ளார். […]

சிவகார்த்திகேயனுடன் கைகோக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – எஸ்கே 17

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவனின் நெறுங்கிய நண்பரான அனிருத்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, and டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது […]
Inandoutcinema Scrolling cinema news