Tag Archives: Rajinikanth

ஸ்டைலிஷான மற்றொரு போஸ்டர் ?!-‘தர்பார்’

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக டிரோல் செய்தனர். ரஜினிகாந்த்தின் ஸ்டார் இமேஜை, அந்த ஸ்டைலைக் கெடுக்கும் விதத்தில்தான் அந்த போஸ்டர் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்த் போஸ்டரில் ஸ்டைலா நின்றாலே போதும், அதுவே கெத்தாக இருக்கும். அப்படியிருக்கையில் அந்த போஸ்டரில், அவர் உடற்பயிற்சி செய்வது போல, கட் பனியனுடன் ‘பாடி பில்டர்’ போல காட்ட வேண்டிய அவசியம் […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம், தர்பார். இதில், நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பொங்கல் அன்று, படம் வெளியாகிறது. இந்நிலையில் ரஜினி, அடுத்தப் படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைய திட்டமிட்டு உள்ளார். இதற்கான, முதற்கட்ட பேச்சு துவங்கியுள்ளது. இதற்கு அடுத்ததாக, சிவா இயக்கத்தில் நடிக்க, ரஜினி முடிவு செய்து உள்ளார்.

ரஜினி படத்தில் ஹாட்ரிக்காக இணைந்த தேங்காய் சீனிவாசன் பேரன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் ஆதித்யா என்பவரும் இணைந்துள்ளார். இவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆவார். ஏற்கனவே ரஜினியின் 2.0, பேட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர், இப்போது மூன்றாவது முறையாக தர்பாரிலும் இணைந்துள்ளார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஆதித்யா.  ரஜினி வளர்ந்து வந்த காலத்தில் அவரது பில்லா, தில்லு முள்ளு […]

ரஜினியின் படத்திற்கு இசை அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி, தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சிவாவின் படத்தில் நடிக்கிறார் ரஜினி.  இந்த படத்தில் இசையமைப்பாளராக சிலரின் பெயர்கள் அடிபடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கூடும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்போது இமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவாவின் முந்தைய படமான அஜித்தின் விஸ்வாசத்திற்கு இமான் தான் இசையமைத்து இருந்தார். அதன் பாடல்கள் […]

ஹீரோ ஆக வேண்டும் என ஆசைப்பட்டதில்லை – ரஜினி

ஹீரோ ஆக வேண்டும் என தாம் ஆசைப்பட்டதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், திரைத்துறையில் கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். வாடகை வீட்டில் வசித்து வரும் கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், இயக்குநர்கள் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த ‘2.0’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றியையும், வசூலையும் பெறாமல் கொஞ்சம் தள்ளாடியது. ஹிந்தியில் மட்டுமே சூப்பர் வசூலை தந்தது.  சீனாவில் படத்தை வெளியிட்டு, அங்கு வசூலித்தால் மட்டுமே படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று அப்போதே சொன்னார்கள். கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட திட்டமிட்டு, பின்னர் அதை ஜுலை 12க்கு தள்ளி […]

ரஜினி வீட்டில் இயக்குனர் பாரதிராஜா ..!

பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் சார்பில் பைரவி படத்தின் மூலம், ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக பிரபலப்படுத்திய தயாரிப்பாளரும், கதாசிரியருமான கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ரஜினிகாந்தை, வீட்டிற்கு சென்று இயக்குனர் பாராதிராஜா அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற ரீதியில் பல்வேறு பேட்டிகளில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த பாரதிராஜா, ரஜினியை வீடு தேடிபோய் அழைத்திருப்பது குறிப்பிடதக்கது. இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி […]

ரஜினிகாந்துக்கு வில்லன் ஆகும் பிரபல கிரிக்கெட் வீரர்!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், ரஜினியின் அறிமுக காட்சியில் யோக்ராஜ் சிங் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைகாட்சி அவருக்கு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின. யோக்ராஜ் […]
Page 1 of 912345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news