Tag Archives: rajini

அமேசான் தளத்திலிருந்து “படையப்பா” நீக்கம்!

தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஆன்லைனில் பார்க்க உதவும் அமேசான் ப்ரைம் வீடியோவிலிருந்து ‘படையப்பா’ திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் ப்ரைம். இதில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2000ல் வெளியான “படையப்பா” திரைப்படமும் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் உரிய அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ […]

100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர்.இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் […]

ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த அதிர்ச்சி…

தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினர் இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. நான் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என கூறி வந்ததாக கூறுகிறார். ஆனால் நான் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவதாக கூறியது 2017 டிசம்பர் 31 ல் கூறினேன். அதற்கு […]

ரஜினியின் மேன் Vs வைல்ட், வெளிவந்த லேட்டஸ்ட் ட்ரைலர் வீடியோ…

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனது நடிப்பையும் தாண்டி வெளிநாட்டில் நடக்கும் மேன் Vs வைல்ட் எனும் நிகழ்ச்சியில் கலந்து […]

ஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை-ரஜினிகாந்த்…

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை   அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ம இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் […]

மோஷன் போஸ்டருடன் வந்தது ரஜினி168 டைட்டில் அறிவிப்பு…

நடிகர் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்துவரும் 168வது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது படத்தின் டைட்டில் அண்ணாத்த என பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தலைவர் 168” டைட்டில்…? தீயாக பரவும் லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு என இரண்டு 80ஸ் கதாநாயகிகள் நடிக்கின்றனர். ரஜினியின் தங்கையாக  கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்திருந்தது.  மேலும் இப்படத்தில் ரஜினியின் மச்சானாக, கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக நடிகர் சித்தார்த்தை நடிக்க வைக்க படத்தின் இயக்குனர் சிவா பேச்சு வார்த்தை நடத்தியாக கூறப்பட்டது. இப்படி படத்தை […]

‘தர்பார்’ box office – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!?

ரஜினிகாந்த், நிவேதா தாமஸ், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ‘தர்பார்’. சுமார் 4000 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் நாள் வசூலாக சுமார் 40 கோடி வரை வந்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 7 கோடி, கேரளா, கர்நாடகா தலா 2 கோடி, வட இந்தியா 5 கோடி, வெளிநாடுகளில் சுமார் 10 கோடி, தமிழ்நாட்டில் 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் […]

ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ் – தேதி…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 8-ந்தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சி திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களை விட அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் ஒருநாளைக்கு முன்னதாகவே தர்பார் படத்தை பார்த்து […]

ரஜினியை சிரிக்க வைத்த மானஸ்வி

ரஜினி நடிக்கும், தர்பார் படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மானஸ்வி, முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இது குறித்து, மானஸ்வி தந்தை நடிகர் கொட்டாச்சி கூறுகையில், ”தர்பார் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி, ‘எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறாய்?’ எனக் கேட்க, மானஸ்வி, ‘பெரிய ஹீரோயின் ஆகி, உங்களுக்கு ஜோடியாக நடிப்பேன்’ எனக் கூற, ரஜினியின் சிரிப்பு அடங்க வெகு நேரமானது,” என்றார்.
Page 1 of 1012345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news