Tag Archives: prithvi pandiyarajan

கதையின் நாயகன் செல்போன் – ஓபாமா உங்களுக்காக படம்

ஓபாமா உங்களுக்காக ஜே.பி.ஜே பிலிம்ஸ் தயாரிப்பில் நாநிபாலா இயக்கும் படம். இந்த படத்தில் பிருத்வி கதாநாயகனாக நடிக்கிறார். ஜனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செல்போன் கொண்டு எதையும் செய்ய முடியும் என்ற கருவை மையமாக கொண்டு சமூக பிரச்சனைகளை எதிரொலிக்கும் படமாக ஓபாமா உங்களுக்காக உருவாகிறது. படத்தின் பாடல்கள் வைரமுத்து, எடிட்டிங் பி.லெனின், ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீனிவாஸ். மேலும் படத்தில் பிரபலமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாண்டியராஜ் மகன் தொடங்கிய கட்சி பெயர் தெரியுமா?

நடிகர் பாண்டியராஜ் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவரது மகன் ப்ரித்வி பாண்டியராஜ். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள பாடுபட்டு கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் நடித்து கொண்டிருக்கும் படம் காதல் முன்னேற்ற கழகம். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சாந்தினி மற்றும் கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது நமக்கு சுப்பிரமணியபுறம் ஞாபகம் வருகிறது.
Inandoutcinema Scrolling cinema news