சென்னை: பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “லக்ஷ்மி” A.L.விஜய் இயக்கியுள்ளார். இசை CS.சாம், ஒளிப்பதிவு நிரவ்ஷா. இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் விஜய் கூறியாதவாது: “லக்ஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். […]